தம்பி படத்தை தொடர்ந்து கார்த்தி பொன்னியின் செல்வன்,சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சுல்தான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

GV Prakash Music Director Karthi PS Mithran Film

இதனை தொடர்ந்து இவர் இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.இந்த படத்தை தேவ் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர்.

GV Prakash Music Director Karthi PS Mithran Film

இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.சூரரை போற்று,D 43,வாடிவாசல் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

GV Prakash Music Director Karthi PS Mithran Film