ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் !
By Sakthi Priyan | Galatta | November 03, 2020 10:53 AM IST

தமிழ் திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43-வது படமாகும். கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் சில பாடல்களை உருவாக்கி முடித்துவிட்டது படக்குழு. தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.
D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர். மேலும் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் குறித்து பதிவு செய்த ஜிவி, அதில் D43 ஆல்பம் நன்றாக வந்துகொண்டிருக்கிறது என பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் பாடல்கள் குறித்த அப்டேட்டை பதிவு செய்கிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனுஷுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 35 வயதுக்கு மேல் ஆனாலும் உடலை ஃபிட்டாக வைத்துள்ளார் தனுஷ். என்றும் கல்லூரி மாணவர் போல் இருக்கும் தனுஷின் ஃபிட்னஸை பார்த்து ஏங்கும் ரசிகர்கள் பல. பொல்லாதவன், VIP, மாரி 2 போன்ற படங்களில் தனுஷ் 6 பேக் கட்டுடலுடன் நடித்த காட்சிகள் அனைத்தும் ஹிட்டு தான். தற்போது தனுஷ் பாணியை கடைபிடிக்கும் ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
சமீபத்தில் தனுஷ் 44 படத்தின் அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஐந்து வருடங்களுக்கு பிறகு DNA காம்போ. அனிருத் ஆன் போர்ட் என்ற செய்தி வெளியானதும் கொண்டாட துவங்கிவிட்டனர் ரசிகர்கள். தனுஷ் கைவசம் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
அத்ரங்கி ரே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. இதுகுறித்து தனுஷூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். இதற்கு முன்னர் தனுஷ் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் முதல் முறையாக பாடியுள்ளார்.
Bigg Boss 4 Tamil Latest Promo - Suresh files complaint against Sanam Shetty!
03/11/2020 12:04 PM
First video song from Nayanthara's Mookuthi Amman - Don't Miss | RJ Balaji
02/11/2020 07:00 PM