தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஜெயில் படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்நிதி நடிக்கிறார். 

GV Prakash Kumars Jail Audio Bagged By Sony Music

ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா, படத்தொகுப்பு அருவி படத்தில் கலக்கிய ரேமண்ட் என தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடந்து முடிந்தது. சமீபத்தில் ஜெயில் படத்தின் காத்தோடு பாடல் குறித்த அப்டேட்டை தெரிவித்தார் ஜிவி பிரகாஷ். தனுஷ் மற்றும் அதிதி ராவ் இந்த பாடலை பாடியுள்ளனர். 

GV Prakash Kumars Jail Audio Bagged By Sony Music

தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த மாஸ்டர், ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் போன்ற படங்களின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாடல் ஆல்பம் ரிலீஸ் தேதி குறித்த ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.