தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் தற்போது கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இயக்குனர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடிக்கும் அநீதி திரைப்படத்தை தொடங்கினார்.

ஜெயில் திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்க, ராதிகா சரத்குமார் பசங்க பாண்டி , யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் ஜெயில் படத்தை 

விரைவில் திரைக்கு வரவுள்ள ஜெயில் படத்தை KRIKES சினி க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் இன்று ஜெயில் திரைப்படத்தின் டீசர் வெளியானது. பரபரப்பான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.