தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், முன்னதாக அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த 2022 ஆண்டு வருகிற ஜனவரி 26ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வீரமே வாகை சூடும் ரிலீஸ்வுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பறிவாளன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராகும் துப்பரிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கும் விஷால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.இதனிடையே மீண்டும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்திசார்ஜ். 

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் லத்திசார்ஜ் திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லத்திசார்ஜ் படத்தின் படப்பிடிப்பில் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் விஷால் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என Pan இந்தியா திரைப்படமாக தயாராகிறது மார்க் ஆண்டனி திரைப்படம். கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக விஷால் நடிப்பில் வெளிவந்த எனிமி திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் மார்க் ஆண்டனி படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் மிரட்டலான வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.