ரசிகர்களுக்கு புது சர்ப்ரைஸ் கொடுக்கும் ஜீவி பிரகாஷ் குமார்... வைரலாகும் கலக்கலான GLIMPSE இதோ!

ஜீவி பிரகாஷ் குமாரின் வேணாம் பேபி பாடல் ப்ரோமோ வெளியீடு,Gv prakash kumar ofro in venam baby music video out now | Galatta

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஜீவி பிரகாஷ் குமாரின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட்டாக வேணாம் பேபி என்னும் மியூசிக் வீடியோ வெளிவர இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஜீவி பிரகாஷ் குமார் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை அடுத்தடுத்து வெளிவந்த 3 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்த வாத்தி, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் மற்றும் ஓரிரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன் & மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடித்த ஹாரர் திரில்லர் படமாக நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் வெளிவந்த பூ (BOO) திரைப்படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ள ஜீவி பிரகாஷ் குமார் சமீபத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் ஆன்தாலாஜி வெப் சீரிஸுக்கு இசை அமைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் பக்கா பீரியட் ஆக்சன் படமாக தயாராகி வரும் தங்கலான், கார்த்தியின் 25 வது படமாக தயாராகி வரும் ஜப்பான், தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர், இயக்குனர் வசந்த பாலனின் அநீதி, இயக்குனர் தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, ஜெயம் ரவியின் சைரன், உலக நாயகன் கமல்ஹாசன் உடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் SK21, விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக வரும் மார்க் ஆண்டனி, ஆர்யா நடிப்பில் வரும் ஜூன் இரண்டாம் தேதி ரிலீசாகும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1, கங்கணா ரணாவத் நடிப்பில் இந்திரா காந்தி அம்மையாரின் பயோபிக் படமாக தயாராகும் எமர்ஜென்சி என அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் ஜீவி பிரகாஷின் இசையில் தயாராகி வருகின்றன. இது போக எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்திற்கும் ஜீவியின் இசை தான்.

இந்த வரிசையில் ஜீவி பிரகாஷ் குமாரின் புதிய மியூசிக் வீடியோவாக வெளிவர இருப்பது தான் வேணாம் பேபி. பிரபல சுயதினை இசைக் கலைஞரான OFRO உடன் ஜீவி பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்த வேணாம் பேபி பாடலை இயக்குனர் கென் ராய்சன் இயக்கியுள்ளார். வருகிற ஜூன் 12ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வேணாம் பேபி மியூசிக் வீடியோ வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்க் ஒரிஜினல் வழங்க வெளிவர இருக்கும் இந்த வேணாம் பேபி மியூசிக் வீடியோவின் முன்னோட்டமாக தற்போது புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. வைரலாகும் கலக்கலான அந்த புரோமோ வீடியோ இதோ…
 

Get ready friends!! #VenamBaby from #ThinkOriginals coming to you’ll on June 12th at 5PM! 🎉#StayTuned #VenamBaby @ofrooooo @kenroyson_ @thinkmusicindia @atticulture pic.twitter.com/AkSLUNV1Tm

— G.V.Prakash Kumar (@gvprakash) June 8, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்... மாஸான அறிவிப்பு இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்... மாஸான அறிவிப்பு இதோ!

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்பிய கே.பாலச்சந்தர்... காலில் விழுந்து மறுத்த சித்தார்த்! காரணம் என்ன? வீடியோ இதோ
சினிமா

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்பிய கே.பாலச்சந்தர்... காலில் விழுந்து மறுத்த சித்தார்த்! காரணம் என்ன? வீடியோ இதோ

மலேசியாவில் மக்கள் செல்வனை காண திரண்ட ரசிகர்கள்... விஜய் சேதுபதி51 பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!
சினிமா

மலேசியாவில் மக்கள் செல்வனை காண திரண்ட ரசிகர்கள்... விஜய் சேதுபதி51 பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!