தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. விண்ணைத்தாண்டி வருவாயா & அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சிலம்பரசன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகராகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

DG ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் D.சபரீஷ் அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த புதிய திரைப்படத்திற்கு செல்ஃபி என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்க, விஜய் டிவி டைகர் தங்கதுரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தனது V கிரியேஷன்ஸ் சார்பில் வழங்கும் செல்ஃபி கன்பஷன்ஸ் ஆஃப் அன் இன்ஜினியர் எனும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ள செல்ஃபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.