தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த வணக்கம் டா மாப்ள  திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இதனையடுத்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்த எந்திரன் திரைப்படம் நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ஜெயில் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளிவர உள்ளன.

அடுத்ததாக தற்போது இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துவரும் இடிமுழக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே திரைப்படத்திலிருந்து புதிய பாடல் இன்று வெளியானது.

அடங்காதே இத்திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க நடிகை சுரபி கதாநாயகியாக நடிக்கிறார் மேலும் சரத்குமார், மந்த்ரா பேடி, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள அடங்காதே படத்திலிருந்து நீயின்றி நானா என்னும் புதிய பாடல் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. அழகான அந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.