இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்ள திரைப்படம் நேரடியாக சன் NXT தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடிப்பில் சில படங்கள் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அடுத்த்தாக சில முக்கிய படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஜீ வி பிரகாஷ் குமார்.அதில் ஒரு படம் இடிமுழக்கம் , இந்த படத்தினை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகின்றனர்.தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி இந்த படத்தினை இயக்குகிறார்.

என் ஆர் ரகுநாதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்,சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.