கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் High and Dry பாடலின் லிரிக் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | September 17, 2020 18:10 PM IST

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று ஆல்பம் வெளியாகி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளித்தது. விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். படத்தில் மருத்துவராக வரும் ஜிவி பிரகாஷின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள். இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.
ட்ராப் சிட்டி என்பது இன்றைய ஹிப்ஹாப் இசை கலாச்சாரத்தை ஒரு கலைநயமிக்க வகையில் எடுத்துக்காடும் திரைப்படமாகும், மேலும் போதைப் பொருளை வியாபாரம் செய்யும் கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கு எதிராக, சாதாரன மனிதனாகப் போராடும் ராப்பரின் கதையைச் சொல்கிறது. ரிக்கி பர்ச்சலின் இயக்கும் இப்படத்தை தமிழரான டெல் கே. கனேசன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் இன்டர்நேஷனல் ஆல்பமான கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் முதல் சிங்கிள் High and Dry பாடல் தற்போது வெளியானது. ஜூலியா கர்த்தா மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய இந்த பாடல் வரிகளை ஜூலியா கர்த்தா எழுதியுள்ளார். ஹாலிவுட் படத்தை தொடர்ந்து இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜிவி பிரகாஷை பாராட்டி வருகின்றனர் இசை பிரியர்கள்.
ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.
Thala Ajith's breaking statement - warns people of fake claims!
17/09/2020 04:35 PM
Lyca Productions' officially announces their next Tamil film - a biopic!
17/09/2020 04:00 PM