திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாரும் இல்லை, 4G, காதலிக்க யாரும் இல்லை, பேச்சலர் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார். 

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் சூரரைப் போற்று திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பணிகள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹாலிவுட்டில் உருவான ட்ராப் சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதன் மூலம் முதல் முதலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். படத்தில் மருத்துவராக வரும் ஜிவி பிரகாஷின் நடிப்பை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.  

இந்நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் இன்டர்நேஷனல் ஆல்பமான கோல்ட் நைட்ஸ் ஆல்பத்தின் இரண்டாம் சிங்கிள் Crying Out பாடல் தற்போது வெளியானது. தனுஷ் இந்த பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டார். ஜூலியா கர்த்தா மற்றும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடிய இந்த பாடல் வரிகளை ஜூலியா கர்த்தா எழுதியுள்ளார்.

இந்த ஆல்பத்தின் முதல் பாடல் High and Dry பாடல் ஏற்கனவே வெளியானது. அதுமட்டுமல்லாமல் பாப் இசையுலகின் நட்சத்திரம் ஜஸ்டின் பைபர் ஜிவி பிரகாஷை சமூக வலைத்தளத்தில் பின் தொடர ஆரம்பித்தார். இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜிவி பிரகாஷை பாராட்டி வருகின்றனர் இசை பிரியர்கள். 

ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.