தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளின் பிரபலமான நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராகவும், நடுவராகவும், கலந்து கொண்டு சின்னத்திரை வாயிலாக மக்கள் மனதில் இடம் பிடித்த சாண்டி மாஸ்டர் தற்போது வெள்ளித்திரையிலும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

குறிப்பாக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி 2-ம் இடம் பிடித்த சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து, தற்போது 3:33 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பாம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நம்பிக்கை சந்துரு 3:33 திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சாண்டி மாஸ்டருடன் நடிகைகள் ஸ்ருதி செல்வம் மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி இணைந்து நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் 3:33 திரைப்படத்திற்கு, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்க, சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 3:33 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. “மூனு மூனு மூனு” எனும் பாடல் இன்று மாலை 3:33 மணிக்கு வெளியானது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குரலில் வெளிவந்திருக்கும் 3:33 திரைப்படத்தின் கலக்கலான “மூனு மூனு மூனு” பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.