OTT ரிலீஸுக்கு தயாராகும் ஜீ வி பிரகாஷின் பேச்சுலர் !
By Aravind Selvam | Galatta | December 27, 2021 17:28 PM IST
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்ள திரைப்படம் நேரடியாக சன் NXT தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடிப்பில் சில படங்கள் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவர் அடுத்ததாக நடித்துள்ள பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் OTT உரிமையை சோனி லைவ் கைப்பற்றியுள்ளனர் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படத்தின் OTT ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are listening to your requests! #Bachelor will be streaming on @SonyLIV real soon ☺️#BlockbusterBachelor@gvprakash @Dili_AFF @AxessFilm @Sathishdiroff @SakthiFilmFctry @thenieswar @Sanlokesh @divyabarti2801 @itspooranesh @APIfilms @thinkmusicindia @DoneChannel1 @Duraikv pic.twitter.com/p8ZApaHARh
— Axess film factory (@AxessFilm) December 27, 2021
Here is the intense TRAILER of GV Prakash's Bachelor | Divya Bharathi
22/11/2021 05:18 PM
G. V. Prakash's Bachelor release date official announcement - Check out!
15/11/2021 07:49 PM