சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் பிறகு ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற சுவையூட்டும் செய்தி வெளியானது. 

Suriya

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். வாடிவாசல் படம் குறித்து கேட்டதற்கு, இது ரொம்பவே முக்கியமான படம். நம்முள் கலந்திருக்கும் இசை, இப்படத்தில் நிரம்பியிருக்கும். ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் இசையை அமைக்கவுள்ளதாக கூறினார். 

GV75

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 75-வது படமான இந்த படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்கவுள்ளார். செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகவுள்ளது.