உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் மீது திரையுலகை சார்ந்த அனைவருக்கும் ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் அடுத்த ஆண்டு (2023) மார்ச் 12-ம் தேதி 95 வது ஆஸ்கார் விருதுகள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த 95-வது ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களின் தேர்வுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சார்பிலும் ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் இயக்குனர் S.S.ராஜமௌலியின் RRR, காஷ்மிர் ஃபைல்ஸ் ஆகிய படங்கள் தேர்வு பெற உள்ளதாக பேச்சுகள் நிலவின.

இந்நிலையில் தற்போது இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு குஜராத்தி படமான லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பான் நளின் இயக்கத்தில் லாஸ்ட் ஃபிலிம் ஷோ படத்தில் பவின் ரபரி, பவிஷ் ஸ்ரிமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், விகாஸ் பாலா மேத்தா ராகுல் கோலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செல்லோ ஷோ, மான்சூன் ஃபிலிம்ஸ் மற்றும் ஜகாத் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படத்திற்கு ஸ்வப்னா.S.சோனாவேன் ஒளிப்பதிவு செய்ய சிறில் மோரின் இசையமைத்துள்ளார். லாஸ்ட் ஃபில்ம் ஷோ படம் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப் பட்டியல் வரை தேர்வாகி விருதை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
 

⭐ Not #RRR
⭐ Not #TheKashmirFiles...
#LastFilmShow [#ChhelloShow] is #India's official entry to the #Oscars... OFFICIAL POSTER... pic.twitter.com/uiWUSCAtB3

— taran adarsh (@taran_adarsh) September 20, 2022