எப்போதும் போலவே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிக் டாக் மற்றும் யூட்யூப் பிரபலமான GP.முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தொடர்ந்து ரசிகர்களின் ஃபேவரட் போட்டியாளராக வலம்வந்தார். மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் தலைவருக்கான போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தனது குழந்தைகளின் மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக தினம்தோறும் அவர்களை நினைத்து, அவர்களை பார்க்க முடியாமல் மிகுந்த மன வேதனை அடைந்த GP.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். இதனையடுத்து பிக்பாஸும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் இது குறித்து GP.முத்துவிடம் எவ்வளவு பேசியும் முத்து வெளியேறுவதில் மிகுந்த உறுதியாக இருந்தார்.

எனவே நேற்று அக்டோபர் 22ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் தனது குடும்பத்தினரை சந்தித்த GP.முத்து அவர்களோடு ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பேசியபடியே GP.முத்து பிரியாணி சாப்பிடும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…