சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

jyothika

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் வா செல்லம் லிரிக் வீடியோ வெளியானது. பிருந்தா சிவகுமார் இந்த பாடலை பாடியிருந்தார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

ponmagal vandhal

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்தின் பின்னணி இசையை வாசிக்கும் வீடியோவை இயக்குனர் ப்ரட்ரிக் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My MasterMind @govind_vasantha 🤗🕺🏻Love sitting next to him while Scoring “Goosebumps Guaranteed” (Last month this day completed #Ponmagalvandhal BGM)

A post shared by Jj Fredrick (@fredrickjj) on