கொரில்லா படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது !
By Sakthi Priyan | Galatta | July 10, 2019 11:19 AM IST
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கொரில்லா. இதில் ஜீவா நாயகனாகவும், ஷாலினி பாண்டே நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஈர்த்து வருகிறது.
தற்போது படத்தின் கேரக்டர் இன்ட்ரோ கொண்ட காட்சி வெளியானது. நாயகி ஷாலினி பாண்டேவின் கேரக்டர் இன்ட்ரோ கொண்ட ப்ரோமோ வெளியாகியது. அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு தமிழில் கால் பதித்திருக்கும் ஷாலினி பாண்டேவின் திரை பயணம் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.