தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழகத்தின் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றாக வளர்ந்திருப்பது ஜீ தமிழ்.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் கோகுலத்தில் சீதை.இந்த தொடரில் ஆஷா கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறார்.நடன இயக்குனர் நந்தா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவோடு சூப்பர்ஹிட் தொடராக அவதரித்துள்ளது.700 எபிசோடுகளை கடந்து வெற்றி தொடராக இந்த தொடர் உருமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் புது கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.தற்போது இந்த தொடர் வெகு விரைவில் நிறைவடைய உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.