மாடல் ஆக அறிமுமாகி பல விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் வினிதா ஜெகநாதன்.சன் டிவியின் ஹிட் தொடரான மகராசி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார் வினிதா ஜெகநாதன்.

அடுத்ததாக சித்தி 2 தொடரிலும் நடித்து அசத்தினார் வினிதா.நடிகையாக மட்டுமல்லாமல் மேக்கப் கலைஞராகவும் அசத்தி வருகிறார் வினிதா.சில சீரியல்களில் நடித்து அசத்திய வினிதாவை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை தொடர்.

இந்த தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வினிதா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சீரியலில் நடித்து அசத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவருக்கு கடந்த டிசம்பர் 2022-ல் திருமணம் நடைபெற்று முடிந்தது.இது குறித்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வந்தன.தற்போது கணவருடன் ஒரு ரொமான்டிக் முத்தமிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் வினிதா,இந்த வீடியோ வைரலாகி வருகிறது.