இணையவாசிகளை ஈர்க்கும் கீதாஞ்சலி செல்வராகவனின் போட்டோஷூட் !
By Sakthi Priyan | Galatta | October 20, 2020 18:46 PM IST

இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்கிற மகளும், ஓம்கார் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து கீதாஞ்சலி தன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கீதாஞ்சலி பதிவிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பத்திரமாக இருங்கள், உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் என்றும், ஜனவரியில் குட்டி செல்வா அல்லது குட்டி கீதாஞ்சலியை காண ஆவலாக உள்ளோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கும், செல்வராகவனுக்கும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று அன்பாக கமெண்ட் செய்து, அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பொதுவாக செல்வராகவனின் படங்களில் வரும் ஹீரோயின்கள் வலிமையாக இருப்பார்கள். பெண்களின் சக்தியை பிரதிபலிக்கும் விதமாக செல்வராகவன் காட்சிகளை அமைத்திருப்பார். செல்வராகனின் இந்த வெற்றிக்கு எப்படி அவரது திறமை முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே போல் அவரது துணைவியார் கீதாஞ்சலி அவர்களுக்கும் பங்குள்ளது. இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.
சிறந்த இயக்குனரான செல்வராகவன், இந்த லாக்டவுனில் நடிகராகவும் களமிறங்கவிருக்கும் செய்தியை அறிவித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் இருவரின் கையில் அருவா மற்றும் துப்பாக்கி உள்ளது. சிவம் சி. கபிலன் இந்த போஸ்டரை வடிவமைத்திருந்தார். யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.
This Tamil music composer onboard for Prabhas' next mega biggie | Massive Update
20/10/2020 05:21 PM