அறிமுக இயக்குனர் திலீப் இயக்கத்தில் மாதவன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ராக்கெட்டரி படத்தின் பணிகள் அனைத்தையும் மாதவன் முடித்தவுடன் இப்புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கும் எனத் தெரிகிறது. இந்த படத்திற்கு மாறா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

madhavan

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான சார்லி படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு பணியாற்றுகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் திலீப் மற்றும் மாதவனுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

maara

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் மாதவனுடன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.