கொரோனா காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டிருப்பதால் திரை பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்கள், தங்களது பழைய புகைப்படங்கள், படம் தொடர்பான நினைவுகளை சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் உரையாடினார். ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. 

இந்நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஜெனிலியா ஆகியோர் பொம்மரில்லு திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளானதையடுத்து இருவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோவை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோவின் பின்னணியில் பொம்மரில்லு படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சித்தார்த், ஜெனிலியா இருவரும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகமானார்கள். முன்னா, ஹரிணி என்ற பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்கள். அதற்கு பின்னர் இருவரும் தமிழ் படங்களில் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தனர். 

இருவரும் இணைந்து நடித்த தெலுங்கு படங்களில் பொம்மரில்லு ரசிகர்களின் ஆதரவைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. இவர் ஏற்று நடித்த ஹாசினி பாத்திரம் இன்றளவும் பேசப்படும் ரோலாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழில் இந்தப் படம் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. 

பிரபல பாலிவுட் நடிகரான ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துள்ளார் ஜெனிலியா. விஜய்யுடன் சேர்ந்து சச்சின் திரைப்படத்தில் நடித்த ஜெனிலியா அதன் பிறகு தனுஷுடன் உத்தமபுத்திரன் படத்தில் நடித்திருந்தார். இறுதியாக வேலாயுதம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N then this happened.. Reunion Missed you Bhaskar, Dilrajugaru, joinprakashraj and @thisisdsp and the entire Bommarillu team ❤️ #14yearsofbommarillu

A post shared by Genelia Deshmukh (@geneliad) on