இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான புதிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. நவரசத்தில் ஒன்பது உணர்வுகளை உணர்த்தும் வகையில் 9 எபிசோடுகளை உள்ளடக்கிய இந்த நவரச வெப்சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ப்ரியதர்ஷன், அரவிந்த்சுவாமி, ரதீந்திரன்.R.பிரசாத், பிஜோய் நம்பியார், சர்ஜுன் மற்றும் வசந்த் சாய் என ஒன்பது இயக்குநர்கள்,  கிட்டார் கம்பி மேலே நின்று, பீஸ், ப்ராஜெக்ட் அக்னி, சம்மர் ஆஃப் 92, இன்மை, எதிரி, துணிந்தபின், பாயாசம் என ஒன்பது உணர்வுகளை உணர்த்தும் ஒன்பது எபிசோடுகள் தயாராகி உள்ளன.

நடிகர்கள் சூர்யா, அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, அசோக் செல்வன், யோகிபாபு, அதர்வா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரசன்னா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், பாபி சிம்மா,, டெல்லிகணேஷ், ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், அதிதி பாலன், பூர்ணா, பிரயாகா மார்டின், அஞ்சலி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் A.R.ரகுமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகர், சுந்தரமூர்த்தி மற்றும் கார்த்திக் என பல இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். முன்னதாக அவர் அதிலிருந்து ஒவ்வொரு பாடல்களாக தினமும் வெளியாகி வந்தது.

அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் இருந்து மேலும் ஒரு புதிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது நானும் என்னும் அந்த மனதை  வருடும் அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.