நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்த மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அடுத்து இயக்கிய வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படங்கள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆன்தாலஜி வெப்சீரிஸில் வான்மகள் என்ற எபிசோடை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் மற்றொரு ஆன்தாலஜி வெப்சீரிஸாக தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் நவரசா உருவாகி வருகிறது.நடிகராகவும் சில திரைப்படங்களில் தோன்றும் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 

அந்தவகையில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மிகுந்த வரவேற்பைப் பெற்ற கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் R.J.பாலாஜி இணைந்த கலக்கலான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. R.J.பாலாஜி போல கௌதம் வாசுதேவ மேனன் கிரிக்கெட் கமென்ட்ரி செய்யும் வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கலக்கலான வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.