தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ல் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்ததாக ஆடுகளம்,விசாரணை,வடசென்னை,அசுரன் என்று தொடர் வெற்றிப்படங்களால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்து நிற்பவர் வெற்றிமாறன்.இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சூரி ஹீரோவாக விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.இதற்கு அடுத்து சூர்யா நடிப்பில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.இவரது விடுதலை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்த படத்தினை தயாரிக்கிறார்.இசைஞானி இளைஞராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் கெளதம் மேனன் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.