காஃபி, புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல், மைன்ட் வாய்ஸ் வசனங்கள் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிக்கிறார். 

Gautham Menon And PC Sreeram Team Up For Webseries

இந்த லாக்டவுனிலும் பிஸியாக காணப்படும் கெளதம் மேனன், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம், ஒரு ஒரு சான்ஸ் குடு பாடல் ஆகியவற்றை இயக்கினார். கிளாஸ் நிறைந்த இந்த இரண்டு படைப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

Gautham Menon And PC Sreeram Team Up For Webseries Gautham Menon And PC Sreeram Team Up For Webseries

இந்நிலையில் லெஜெண்ட்ரி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் இணையவுள்ளார் கெளதம். அமேசான் நிறுவனம் தயாரிக்கும் புதிய வெப்சீரிஸில் கெளதம் மேனன் இயக்கத்தில் பணியாற்றவுள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இதன் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.