பத்து தல படத்தில் சிலம்பரசன்TR உடனான பயணம் - இயக்குனர்கள் மாற்றம்... மனம் திறந்த கௌதம் கார்த்திக்கின் சிறப்பு பேட்டி இதோ!

பத்து தல படம் குறித்த மனம் திறந்த கௌதம் கார்த்திக்,gautham karthik shares about silambarasan tr and pathu thala journey | Galatta

இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் கௌதம் கார்த்திக். அந்த வகையில் தனது அடுத்த அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி ராமர் கிரிமினல் படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் உடன் இணைந்து சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிரிமினல் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், இது அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 படத்தில் குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் அஸ்டன், ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 7-ம் தேதி 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் பத்து தல திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். PEN STUDIOS வழங்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இரண்டாவதாக 

இந்நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்கள் உடனான நேர்காணலில் பேசிய கௌதம் கார்த்திக் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பத்து தல படத்தின் பயணம் குறித்து கேட்டபோது, "இது ஒரு பெரிய விருந்தாக இருக்க போகிறது. எனக்கு இது ஒரு பயணம் தான். இப்போது பல பேருக்கு தெரிந்திருக்கும் இது மஃப்டி திரைப்படத்தின் ரீமேக். அதே இயக்குனரை (நாரதன்) வைத்து இயக்க திட்டமிட்டிருந்தோம். STR அண்ணணும் நானும் ஸ்டுடியோ கிரீனில் இணைந்தோம். நாங்கள் ஒரு 18 நாட்கள் 2019 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவேளை. கொரோனா காலகட்டத்தில் இன்னும் பெரிய இடைவேளையானது. அதன்பிறகு இயக்குனர் கிருஷ்ணா அவர்கள் வந்தார். அவர் இதை ரீமேக் என்பதை தாண்டி தழுவல் என்ற பாணியில் முற்றிலுமாக மாற்றி அமைத்தார். மஃப்டி திரைப்படத்தில் இருந்த கதாபாத்திரங்கள் மற்றும் அதோடு சேர்த்து இல்லாத சில கதாபாத்திரங்களை உருவாக்கினார். கதையின் போக்கும் அதே போல் தான் இருக்கும். நான் இப்போது இந்த படத்தை பார்க்கும் போது முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது. நான் மஃப்டி படமும் பார்த்திருக்கிறேன். அந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நடிகர் ஸ்ரீ முரளி சார் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடிப்பதற்கு முன்பு மிகவும் பயந்தேன். அவர் மிகவும் உடல் அளவில் பெரியதாக இருப்பார் அவருக்கென ஒரு குரல் இருக்கிறது. அது அந்த கதாபாத்திரத்திற்கு மிக அழகாக இருந்தது. ஆனால் என்னிடம் அந்த மாதிரியான ஒரு லுக் இல்லை. அந்த அளவிற்கான ஒரு பவரும் இல்லை. இதை மாற்றுவதற்காக யோசித்தபோது கிருஷ்ணா சார் ஒரு ஐடியாவோடு வந்தார் நீளமான முடி மற்றும் ஒரு கோபமான லுக். நீங்கள் படம் பார்க்கும்போது அது ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும் நாங்கள் அதை இந்த கதாபாத்திரத்திற்கான ஒரு சோதனையாக செய்திருக்கிறோம். கடைசியில் அதற்கான சரியான பாடி லாங்குவேஜை பிடித்து விட்டேன். என்னால் முடிந்த சிறந்த உழைப்பையும் மேனரிசமும் கொடுத்து விட்டேன். இது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்." என பதில் அளித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

எல்லா மொழி - எல்லா ஹீரோக்களும் அவருக்கு காத்திருக்கிறார்கள்... லோகேஷ் கனகராஜை புகழ்ந்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ
சினிமா

எல்லா மொழி - எல்லா ஹீரோக்களும் அவருக்கு காத்திருக்கிறார்கள்... லோகேஷ் கனகராஜை புகழ்ந்த KEஞானவேல் ராஜா! வைரல் வீடியோ

செல்போன் வால்பேப்பரில் SSராஜமௌலி.. காரணம் என்ன? உண்மையை உடைத்த பத்து தல தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ உள்ளே
சினிமா

செல்போன் வால்பேப்பரில் SSராஜமௌலி.. காரணம் என்ன? உண்மையை உடைத்த பத்து தல தயாரிப்பாளர் KEஞானவேல் ராஜா! வீடியோ உள்ளே

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட செம்ம ட்ரீட்… மனதை மயக்கும் முதல் பாடலாக வந்த ரம்மியமான அக நக லிரிக் வீடியோ இதோ!