தளபதி விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எழில் தொடர்ந்து தல அஜித் குமார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தையும் இயக்கினார். அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எழில்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவைக்கு பிறகு இயக்குனர் எழில் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் நகைச்சுவை சரவெடிகள் தான். கடைசியாக இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த சரவணன் இருக்க பயமேன் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் எழிலின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தனது வழக்கமான காமெடி ஃபேமிலி என்டர்டெய்னர் பாணியிலிருந்து சற்று விலகி தற்போது முதல்முறையாக யுத்தம் எனும் கிரைம் திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.Kallal Global Entertainment சார்பாக  D.விஜயகுமாரன் மற்றும் இயக்குனர் எழில் இணைந்து "யுத்த சத்தம்" படத்தை தயாரிக்கின்றனர். புகழ்பெற்ற க்ரைம் த்ரில்லர் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் பல  முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி பாடல் வரிகள் எழுத இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது யுத்தம் சத்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி யுத்த சத்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டார். மிரட்டலான யுத்த சத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.