மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிலம்பரசன்.TRன் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.அந்த வகையில் சிலம்பரசன்.TR - இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 3-வது முறையாக உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சிலம்பரசன்TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.ஃபரூக் J பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளான இன்று செப்டம்பர் 12ஆம் தேதி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பத்து தல படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Wishing Our Beloved Actor Gautham Karthik, a very happy birthday 🎉🎉 from team #PathuThala 💐💐💐#Atman #SilambarasanTR #PathuThalaFromDec14@StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @arrahman @nameis_krishna @priya_Bshankar pic.twitter.com/WiLRJiTpkd

— Studio Green (@StudioGreen2) September 11, 2022