காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸாகியுள்ளது.

Gautam Menon Anushka Film Military Thriller Genre

பல முறை தள்ளிப்போன இந்த படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Gautam Menon Anushka Film Military Thriller Genre

இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள குயின் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடர் குறித்த பிரத்யேக உரையாடலின் போது கெளதம் மேனன் தனது அடுத்த படம் குறித்து மனம் திறந்துள்ளார்.அனுஷ்காவுடனான தனது அடுத்த படம் மிலிட்டரி திரில்லர் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.