திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகைகளில் ஒருவர் நடிகை ஆர்த்தி. குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் வளர்ந்த பிறகு வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சயில் விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், நடிகர் கணேஷ்கருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்ற லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி இந்த ஊரடங்கில் நல்ல முடிவை எடுத்தார். ஒரு வருடத்திற்கு நான் நடிக்கின்ற படங்களுக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்கி கொள்கிறேன் என்று கூறினார். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் நம்ம முதலாளி. அவர்கள் நல்லா இருந்தா தான், நாம நல்லா இருக்க முடியும்.  என்னோட சின்ன பங்களிப்பு இது என்று முடிவெடுத்தார். 

சமூக வலைத்தளங்களில் ஆர்த்தி காமெடியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தன்னைத் தானே கலாய்த்தும் புகைப்படங்களை வெளியிடுவார். அது தான் ரசிகர்களுக்கு ஆர்த்தியிடம் பிடித்த விஷயம். தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வராது என்று பாராட்டி வருகின்றனர். 

விஸ்வாசம்  திரைப்படத்தில் இடம்பெற்ற அடிச்சுதூக்கு பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை தல அஜித் குமாருடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். சமீபத்தில் புட்ட பொம்மா பாடலுக்கு ஃபேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை அல்லு அர்ஜுன் முகத்தோடு இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் நடிகை ஆர்த்திக்கு ஆடி காரை கிஃப்ட்டாக வழங்கியுள்ளார் அவரது கணவர் கணேஷ்கர். இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். திரைப்பிரபலங்கள் சொகுசு கார் வாங்குவது ஃபேஷனாகிவிட்டது என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். சமீபத்தில் நஸ்ரியா மற்றும் ஃபகத் ஃபாஸில் புதிய சொகுசு கார் வாங்கியிருந்தனர். அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.