ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

ganeshvenkatraman

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் நிஷாவை திருமணம் செய்துகொண்டார். விளம்பர படங்கள் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். இந்த அழகான ஜோடிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

ganeshvenkatraman

Ganeshvenkatraman

இந்நிலையில் நடிகர் கணேஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 9 மாதங்களை என் மகள் சமைரா நிறைவு செய்துள்ளார். எங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளார் என்று பதிவு செய்துள்ளார்.