கடந்த 2005-ம் ஆண்டு வெளியான மழை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என ஹிட் படங்களில் நடித்தார் ஸ்ரேயா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கியவர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. நடிகை ஸ்ரேயா நடிப்பில் நரகாசூரன், சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் வெளிவரவிருக்கிறது. 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தனது கனவருடன் வீடியோ வெளியிடுவது, தொடர்ந்து போட்டோஷூட்கள் செய்வது என பிஸியாக இருந்தார் ஸ்ரேயா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.

ஸ்ரேயா சரண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கமனம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு மாதங்கள் முன்பு வெளியானது. இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் காது கேளாதோர் பாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக கமனம் படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

இதில் ஸ்ரேயா சரணுடன் இணைந்து நித்யா மேனன், பிரியங்கா ஜவல்கர், ஷிவா மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலரை நடிகர்கள் ஜெயம் ரவி, பவன் கல்யாண், ஃபஹத் ஃபாசில், ஷிவராஜ்குமார், சோனு சூட் ஆகியோர் ரிலீஸ் செய்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

கமனம் ட்ரைலர் காட்சியை பார்க்கையில், மூன்று கதைகள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரைலர் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.