வழக்கம்போல் ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று(அக்டோபர் 9) கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர்.

இவர்களில் தமிழக யூட்யூப் வரலாற்றிலேயே முதல் முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக களமிறங்குகிறார். தமிழகத்தின் திறமையான தரமான அரசியல் தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவரான விக்ரமன் நமது கலாட்டா சேனலின் முன்னாள் அரசியல் தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது சமூக நலனில் அக்கறை கொண்ட அரசியல் பிரமுகராக மதிப்பிற்குரிய தொல்.திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் திகழும் விக்ரமன் தனது சிறப்பான அரசியல் சார்ந்த பேட்டிகளிலும் பேச்சுக்களாலும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக விக்ரமன் சென்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தருணம் நமது கலாட்டா சேனலுக்கு மிகவும் பெருமை மிக்க தருணமாக அமைந்துள்ளது. நமது விக்ரமனின் இந்த பிக் பாஸ் என்ட்ரியும், அவருக்குக் கிடைத்த வரவேற்பும் நமது கலாட்டாவிற்கும் கிடைத்த வரவேற்பு என்பதும் கலாட்டா எட்டியுள்ள வளர்ச்சியை குறிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

#பிக்பாஸ் இல்லத்தில்.. #VIKRAMAN #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/C9Z1QPRWgW

— Vijay Television (@vijaytelevision) October 9, 2022