தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி பல துறைகளில் சாதிக்கும் பலருக்கும் விருதுகள் வழங்கி கலாட்டா சிறப்பித்துள்ளது..சில மாதங்களுக்கு முன் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழாவாக The Galatta Crown 2022 விருது விழாவை நடத்தி அசத்தினோம்.

இதனை தவிர Wonder woman,தொலைக்காட்சி விருதுகள் என பல விருதுகளை அளித்து பல பிரபலங்களையும்,நட்சத்திரங்களையும் கௌரவித்துள்ளோம்.அந்த வரிசையில் அடுத்ததாக டிஜிட்டல் யுகத்தில் கலக்கும் பலரையும் கௌரவிக்கும் படி கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 என்ற விருது நிகழ்ச்சியை அக்டோபர் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தி பல யூடியூப் மற்றும் டிஜிட்டல் கலைஞர்களை கௌரவித்தோம்.

விழாவில் பல முன்னணி டிஜிட்டல் பிரபலங்கள் கலந்துகொண்டு விருதுகளை வென்றனர்.அதன் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன.டிஜிட்டலில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி Dazzling Star of Social Media என்ற விருதினை கைப்பற்றினார்.பெரிய ரசிகர் பட்டாளத்தை சோசியல் மீடியாவில் கொண்டுள்ள இவர் இந்த விருதினை வென்றது மிகவும் மகிழ்ச்சி , தனது தங்கை மற்றும் அம்மாவிற்கு நன்றி என தெரிவித்து , தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்கள் தான் அவர்கள் இப்போது போல எப்போதும் ஆதரவாக இருப்பார்கள் என  நம்புகிறேன் தன்னை பார்க்க நேரில் வந்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.ரசிகர்களுக்காக பாடல் பாடி,நடனமாடி கலக்கிய இவரது வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்