மாடலிங் மூலம் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி அடுத்ததாக தட்றோம் தூக்குறோம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் Fouziee என்ற Fouzil Hidhayah.திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக அவளும் நானும்,சிவா மனசுல சக்தி,லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.இவற்றை அடுத்து சில குறும்படங்கள் ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் நடித்தார் Fouzil Hidhayah.

இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை,யாரடி நீ மோஹினி உள்ளிட்ட பெரிய ஹிட் தொடர்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமான குணச்சித்திர நடிகையாக மாறினார் Fouzil Hidhayah.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.

தற்போது இவர் நடித்தள்ள புது சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்திரா என்ற தொடரில் Fouzil Hidhayah ஹீரோயினாக நடித்துள்ளார்.பிரபல சீரியல் நடிகர் அக்ஷய் கமல் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்