எப்போதும் பாடல்களுக்கு மொழி கிடையாது.ஒரு பாடல் நன்றாக இருந்து அது செம ஹிட் அடித்து விடும்,அப்படி பல பாடல்கள் இருந்திருக்கின்றன.ஆங்கிலம்,ஹிந்தி என்று மொழி தெரியாத பாடல்கள் கூட நம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இது இன்னும் எளிதாகி விட்டது.

படங்கள் பாடல்கள் என்று தங்களுக்கு வேண்டியதை ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் பார்த்து ரசித்து கொள்ளும் வசதி கிடைத்துள்ளது.பல பாடல்களும் படங்களும் மில்லியன் பில்லியன் என்று பட்டையை கிளப்பும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

சமீபத்திய ஹிட் பாடல்களான புட்ட பொம்மா,ரௌடி பாபு பாடல்கள் இதற்கு எடுத்துக்காட்டாக இமாலய சாதனைகளை படைத்தது.இதனை தொடர்ந்து ரசிகர்களை கவரும் வண்ணம் பல பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட் அடித்துள்ளன.அதில் குறிப்பிடும் படியான சில பாடல்கள் காந்தகண்ணழகி,செல்லம்மா,வாத்தி கம்மிங்,ரகிட ரகிட போன்றவை.

மொழிகளை தாண்டி இந்த பாடல்கள் வைரல் ஹிட் அடித்திருந்தன.இதற்கு பல நாடுகளை சேர்ந்தவர்களும் தங்கள் வெர்ஷன் ஒன்றை பதிவிட்டு மகிழ்வார்கள்.அப்படி சில வீடியோக்கள் இந்தியாவில் கடந்த லாக்டவுன் நேரத்தில் செம வைரலாகவும் இருந்தன.சமீபத்தில் கூட வெளிநாட்டு பெண் ஒருவர் காந்தகண்ணழகி பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடீயோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.