கைது செய்யப்பட்ட பிறகு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட ஜோடிகள், ஆடைகளைக் கழற்றிவிட்டு கில்மாவில் ஈடுபட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், காதல் ஜோடி ஒன்று, இருசக்கர வாகனத்தில் சென்று போலீசார் ரோந்து செல்லும் வாகனத்தில் மோதியுள்ளனர். இதனையடுத்து, அந்த ஜோடியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Florida couple

அப்போது, அவர்கள் இருவரும் குடிபோதையிலிருந்தது தெரியவந்தது. மேலும், இருவருக்கும் முகத்தில் காயங்கள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் கேட்ட கேள்விக்கு அவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்யும் நோக்கில், வாகனத்தில் ஏற்றினர்.

Florida couple

காதல் ஜோடிகளை வாகனத்தில் ஏற்றியப் பிறகு, அந்த காதல் ஜோடி வந்த வாகனத்தை எடுத்து போலீசார் ஓரமாக வைத்துவிட்டு, அங்கேயே நின்று பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில், போலீசார் வாகனம் அசைய ஆரம்பித்துள்ளது.

இதனால், போலீசார் வாகனத்தின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த காதல் ஜோடி தங்களது ஆடைகளைக் கழற்றிவிட்டு, போலீஸ் வாகனம் என்றுகூட பாராமல், அங்கேயே சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போலீசார் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். 

இதனையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார், அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.