தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.இவர் நடித்துள்ள காடன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக FIR,மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

FIR படத்தில் விஷ்ணு விஷால் Fizal Ibrahim Raiz என்ற தீவிரவாதியாக தோன்றுவார் என்று தெரிகிறது.கெளதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கவுள்ளார்.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

மஞ்சிமா மோகன்,ரைசா வில்சன்,ரெபா மோனிகா ஜான் ஆகியோர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பயணம் என்ற பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.செம ரொமான்டிக்கான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்