கொரோனா பரவல் இந்தியாவில் அதிகப்படியாக இருந்துவருவதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்திலும் கடந்த 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24ஆம் தேதி முதல் பல சினிமா ஷூட்டிங்குகள் மற்றும் சீரியல் ஷூட்டிங்குகள் நடத்தப்பட்டு வந்தன.சில ஷூட்டிங்குகள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன.ஆனால் அந்த சீரியல்களில் பங்கேற்ற நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவே ஷூட்டிங்குகளை நிறுத்தியுள்ளனர்.

ஷூட்டிங் எடுத்தவரை சீரியல்களை சேனல்கள் ஒளிபரப்புமா அல்லது சில எபிசோடுகளை மீதம் வைத்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கிய பின்னர் ஒளிபரப்புமா என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.எனவே மீண்டும் தொலைக்காட்சிகள் தங்கள் பழைய நிகழ்ச்சிகள் படங்கள் சூப்பர்ஹிட் சீரியல்கள் உள்ளிட்டவற்றை ஒளிபரப்புவார்கள் என்று தெரிகிறது.

தற்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி வரும் 31ஆம் தேதி வரை படம்,சீரியல் உள்ளிட்டவற்றின் ஷூட்டிங்,இறுதிக்கட்ட ப்ரொடக்ஷன் வேலைகள் உள்ளிட்டவற்றை நிறுத்திவைக்க FEFSI அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.31ஆம் தேதி மீட்டிங் நடைபெற்று அதன் பிறகு ஷூட்டிங் நடத்துவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.