உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இல்லையென்றாலும் , வருவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

FEFSI Announces Halt Of Shoot From March 19

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை,அலுவலகங்களுக்கு விடுப்பு என்று நோயை கட்டுக்குள் கொண்டுவர பல வழிகளில் முயற்சிகள் நடந்து வருகிறது.தற்போது FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

FEFSI Announces Halt Of Shoot From March 19

FEFSI Announces Halt Of Shoot From March 19

இதன்படி கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அடுத்த நடவடிக்கை மார்ச் 25ஆம் தேதி இருக்கும் நிலைமையை பொறுத்து எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FEFSI Announces Halt Of Shoot From March 19