தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். ஸ்டூடெண்ட் நம்பர் 1 படம் மூலம் அறிமுகமானவர் மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என தொடர்ச்சியாக அசத்தி வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் இவருக்கு கம்பேக் என்றே கூறலாம். அதைத்தொடர்ந்து ஜாக்சன் துரை, வால்டர் என ஈர்த்து வருகிறார். 

sibiraj

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சிபிராஜிடம், தளபதிக்கு ஃபோன் செய்து மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலரை ரிலீஸ் பண்ண சொல்லுங்க ப்ரோ. என்டர்டெயின்மென்ட் இல்லை என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிபிராஜ், கண்டிப்பா ப்ரோ என்று பதிவு செய்துள்ளார். 

Sibiraj

சிபிராஜ் தீவிர விஜய் ரசிகர் என்பது நாம் அறிந்தவையே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலரை காண அவரும் ஆவலாக தான் இருப்பார் என்று கூறினால் மிகையாகாது.