கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இத்திரைப்படம் ரவி ஓ எஸ் இயக்கத்தில் கோபி, ஜான் விஜய், நிரஞ்சன், ரம்யா பாண்டியன் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் நடிப்பில்வெளிவந்த படமாகும்.

இதையடுத்து ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. ஜோக்கர் அரசியல் மற்றும் சமூக கதை கொண்ட திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பல ரசிகர்களை கவர்ந்தார். மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான நட்சத்திரம் என்றால் அது ரம்யா பாண்டியன் தான். 

இதன் பின் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரம்யா. இந்நிகழ்ச்சியில் சிங்கப் பெண் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி பெண் போட்டியாளராக வெளியாகினார் ரம்யா. இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ரம்யா பாண்டியன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின் அவருக்கு கிடைத்திருக்கும் ரசிகர்களை பார்த்து ஆச்சர்யம் அடைந்தார். பிக் பாஸ் கொண்டாட்டம் ஷோவிலும் ரசிகர்கள் பலர் வந்து ரம்யா பாண்டியனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தனர். 

இந்நிலையில் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர் ஒருவர் மிக உயரமான கட் அவுட் வைத்து அதற்கு பாலபிஷேகம் செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. அஜித், விஜய் ரேஞ்சுக்கு ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் கட்டவுட் வைத்திருப்பதை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர். இதெல்லாம் டூ மச் என கூறி ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரம்யாவை நெட்டிசன்கள் அதிகம் பேர் ட்ரோல் செய்து வரும் நிலையில் இந்த காரணத்திற்காக ட்ரோல் இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. ரம்யா பாண்டியன் தற்போது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.