இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை செதுக்கி கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கத்தில் வெளியான காஞ்சனா சீரிஸ் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்படுகிறது. தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். ஹிந்தியில் அக்ஷய் குமார் வைத்து லக்ஸ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார். மக்கள் நலன் கருதி பல நற்பணிகளை செய்து வருகிறார். 

Fan Boy Kissing Raghava Lawrence Poster

நாடு முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வருகின்றனர். இந்நிலையில் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில் சாலையில் இருக்கும் அவரது போஸ்டருக்கு சிறுவன் ஒருவன் அன்போடு முத்தம் தரும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Fan Boy Kissing Raghava Lawrence Poster

இந்த போட்டோவை பகிர்ந்த லாரன்ஸ், இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தேன். குழந்தைகளை தெய்வம் என்று சொல்வார்கள். நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் உதவி செய்து வருகிறேன். இதை பார்க்கும் போது, எனக்கு ஒரு அவார்ட் கிடைத்தது போல இருக்கிறது. இது என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இந்த சிறுவனை நான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இதுகுறித்து யாருக்காவது தெரிந்தால், 877 - 8338209 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.