மலையாள திரை உலகின் மிகச்சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஃபகத் ஃபாசில். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிப்பு அரக்கன் -ஆக வலம் வருகிறார்.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஃபகத் ஃபாசில் தொடர்ந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இதையடுத்து ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான மாலிக் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ள மாலிக் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் உடன் இணைந்து நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்க ஜோசப் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்த ஜோஜூ ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

முன்னணி தயாரிப்பு நிறுவனமான அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கும் மாலிக் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் நேரடியாக வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான மாலிக் திரைப்படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் மாலிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்ததாக  உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்திலும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தெலுங்கு திரைப்படத்திலும் நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.