தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.சுகுமார் இயக்கத்தில் இவர் நடித்த புஷ்பா படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சமந்தா ஒரு சிறப்பு பாடலில் தோன்றியுள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் பாகம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது,இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் புஷ்பா குறித்து பேசிய பஹத் , புஷ்பா முதலில் ஒரு பாகமாக உருவாக வேண்டிய படம்தான் கதை விரிவடைய இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது,சுகுமார் இன்னும் நிறைய கதை வைத்துள்ளார் அதனை வைத்து அவர் புஷ்பா 3 எடுக்கவும் ரெடி ஆக இருக்கிறார்.தன்னிடம் கடைசியாக பேசியபோது கூட புஷ்பா 3க்கும் ரெடி ஆக இருங்கள் என்று சுகுமார் தெரிவித்ததாக பஹத் கூறினார்.