Exclusive : தனுஷ்-மாரி செல்வராஜ் படத்தின் தற்போதைய நிலை !
By Aravind Selvam | Galatta | June 04, 2019 17:50 PM IST

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன்,துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என செம பிஸியாக நடித்து வருகிறார்.இதனை அடுத்து ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம்,பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுடன் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.
தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜ் படத்திற்கான ஷூட்டிங்கை துவங்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தொடங்கும் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.