கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தார். பிரபல மாடலான இவர், சிபிராஜ் நடித்த வால்டர் படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் மஹா படத்தில் நடித்துள்ளார். 

எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவானது. 

இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் வீட்டில் செல்வதற்கு முன்பே எதிர்வினையாற்று படத்தில் நடித்து விட்டார் சனம். தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்த படத்தில் இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காவல் அதிகாரியாக RK சுரேஷ் நடித்துள்ளார். யுவன் கார்த்திக் பின்னணி இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு வேதந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். 

பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த மருது திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், கதாநாயகனாக நடித்து வருகிறார். சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இவர் கைவசம் விசித்திரன் திரைப்படம் உள்ளது.