தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடைசியாக கே-13 திரைப்படம் வெளியானது. இதன் பிறகு ஜீவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 

arulnidhi

இந்நிலையில் அருள்நிதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. யூடியூபில் எருமசாணி புகழ் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 

erumasanivijay

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூபிலிருந்து வெள்ளித்திரையில் இயக்குனராக கால் பதிக்கவிருக்கும் விஜய்க்கு பாராட்டுக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.